கன்னியாகுமரியில் திமுகவின் ஹெலன் டேவிட்சன் வெற்றி
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கடும் போட்டிக்கு மத்தியில் கன்னியாகுமரி தொகுதியை வென்றுள்ளது திமுக.
முன்பு நாகர்கோவில் என அழைக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் ஹெலன் டேவிட்சனும், சிபிஎம் சார்பில் தற்போதைய எம்.பி. பெல்லார்மின், பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேமுதிக சார்பில் ஆஸ்டின் ஆகியோர் போட்டியிட்டனர்.
கடும் போட்டி நிலவிய இந்தத் தொகுதியில், இறுதியில் திமுக வேட்பாளர் ஹெலன், 65 ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொகுதியை சிபிஎம்மிடமிருந்து திமுக சார்பில் கைப்பற்றியுள்ளார்.
மொத்த வாக்குகள்: 11,78,047
பதிவானவை: 7,65,663
ஹெலன் டேவிட்சன் (திமுக)- 3,20,161
பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக)-2,54,474
பெல்லார்மின் (சிபிஎம்)-85,583
எஸ்.ஆஸ்டின் (தேமுதிக)- 68,472
சிவகாமி(பகுஜன் சமாஜ்)- 6,400


Click it and Unblock the Notifications
