திருவண்ணாமலையில், காடுவெட்டி குருவை வீழ்த்திய திமுக வேணுகோபால்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாமகவின் காடுவெட்டி குரு, திருவண்ணாமலையில் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளார்.
திருவண்ணாமலையில் காடுவெட்டி குருவை எதிர்த்து, திமுக சார்பில் வேணுகோபால் நிறுத்தப்பட்டார். திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவர் வேணுகோபால். திருப்பத்தூர் தொகுதி எம்.பியாக இருந்தவர்.
காடுவெட்டி குருவின் சவாலை சமாளிக்கும் வகையில் அனுபவம் வாய்ந்த வேணுகோபாலை நிறுத்தியது திமுக.
ஒரு சுற்று கூட விடாமல் வேணுகோபால் தொடர்ந்து முன்னணி வகித்து வந்தார். இறுதியில், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 690 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் குரு.
வேணுகோபால் பெற்ற வாக்குகள் - 4,32,302
காடுவெட்டி குரு பெற்ற வாக்குகள் - 2,84,612


Click it and Unblock the Notifications
