அடுத்த நிதியமைச்சர் மான்டேக் சிங் அலுவாலியா?

நாடாளுமன்ற தேர்தலில் வென்ற காங்கிரஸ் தற்போது புதிய அமைச்சரவையை நிர்ணயிக்கும் வேலையில் உற்சாகமாக இறங்கியுள்ளது. இதற்கான காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் நடந்தது.
கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், நிதித்துறை பொறுப்பை தற்போது திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக இருக்கும் மான்டேக் சிங் அலுவாலியாவுக்கு கொடுக்கலாம் என்று கூறியதாகத் தெரிகிறது.
இவருக்கு நிதியமைச்சர் பதவி அளிக்கப்பட்டால் இவரும பிரதமர் மன்மோகன் சிங்கை போல் மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழைவார்.
சிறந்த பொருளாதார நிபுணரான அலுவாலியா கடந்த 2006 ஜூனில் திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக்கப்பட்டார். தற்போது 65 வயதாகும் அவர் நிதித்துறை செயலாளர், வர்த்தகதுறை செயலாளர், நிதித்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகர் உள்ளிட்ட பணிகளில் இருந்துள்ளார்.
சில காலம் ஐ.எம்.எப்பிலும் பணிபுரிந்துள்ளார் அலுவாலியா. பிரதமர் மன்மோகன் சி்ங்கின் வலதுகரமாக கருதப்படுபவர் இவர்.
கமல்நாத்துக்கு வர்த்தகத்துறை..
அதே போல இப்போதைய வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத் தொடர்ந்து அதே பதவியில் இருப்பார் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இந்தப் பொறுப்புக்கு கபில் சிபலின் பெயரும் அடிபடுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications