அனைத்துத் தமிழர்களும் மீட்கப்பட்டு விட்டனர்: ராணுவம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் வசம் இருந்த அனைத்துத் தமிழர்களையும் மீட்டு விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் தற்போது கடைசியாக உள்ள பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக ராணுவம் திடீரென அறிவித்துள்ளது.
இதனால் அங்கு சிக்கியிருக்கிற அத்தனை பேரையும் மொத்தமாக அழித்து விட்டு, அனைவருமே விடுதலைப் புலிகள் என கூற இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், கடந்த 3 நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை ராணுவம் மீட்டுள்ளது.
தற்போது விடுதலைப் புலிகள் வசம் அப்பாவி மக்கள் யாரும் இல்லை. மனிதக் கேடயங்களாக இருந்த அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர் என்றார்.
அனைத்துத் தமிழர்களையும் மீட்டு விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளதால், இனி புலிகள் உள்ள கடைசிப் பகுதிக்குள் ராணுவம் பெருமளவில் புகுந்து தனது கடைசிக் கட்டத் தாக்குதலை மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ராணுவத்தின் தொடர் நடவடிக்கையால் நேற்று மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இன்று காலை முதல் பல நூறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கையிலிருந்து தகவல்கள் வந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று காலை படகு மூலம் தப்பிச் செல்ல முயன்ற 70 விடுதலைப் புலிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. அதில் பிரபாகரன் இல்லை என்று பின்னர் ராணுவம் தெரிவித்தது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications