போர் நிறுத்தம்-மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பின் மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரப் போவது உறுதியானவுடன் நேற்று மாலை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 27ம் தேதி நான் உண்ணாவிரதம் இருந்தேன். அதைத் தொடர்ந்து மத்திய அரசு எடுத்த முயற்சியினால் இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி போரை நிறுத்துவதாக அறிவித்தது.
ஆனாலும் இலங்கையில் முழுமையான போர் நிறுத்தம் ஏற்படவில்லை. ராணுவ நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக ஒரு பக்கமும், இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக ஒரு பக்கமும் செய்திகள் வந்துள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இலங்கைப் பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய அரசும் ஏற்கெனவே கூறிவருவது போல போர் நிறுத்தம் ஏற்பட்டு அரசியல் தீர்வு காணப்பட உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரழிவை நிறுத்தி, அமைதியை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications