இலங்கை அரசின் வதந்திகளை நம்பாதீர்-தமிழர் பாதுகாப்பு இயக்கம்
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். அவர் குறித்து இலங்கை அரசு பரப்பும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
ஈழத்தில் போர்ப் பகுதியில் இருந்து அனைத்து மக்களையும் வெளியேற்றி விட்டதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உடலை கைப்பற்றி இருப்பதாகவும் இலங்கை அரசும், இந்தியாவில் உள்ள ஊடகங்களும் திட்டமிட்ட பொய்ச் செய்தியை பரப்பி வருகிறார்கள்.
1 லட்சம் மக்கள் சிக்கியுள்ளனர்...
உண்மை என்னவெனில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் போர்ப்பகுதியில் இன்னமும் உள்ளார்கள். அவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கும் திட்டத்துடன் சிங்கள ராணுவம் கொடூர தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது.
இதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமுற்றுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட காயம்பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி தெருக்களில் கிடக்கின்றனர்.
மக்களைக் காப்பாற்ற ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் அனைத்து முன்னணி தளபதிகளும் விடுதலைப் புலிகளும் களத்தில் நின்று தீரத்துடன் போராடி வருகின்றனர்.
இந்த போர்ச் செய்தியையும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையையும் மறைக்கவே, இலங்கை அரசு பொய்ச் செய்திகளை பரப்பி வருகிறது.
சாவின் விளிம்பில் நிற்கும் மக்களைக் காப்பாற்ற இந்த கட்டத்திலாவது ஐ.நா.வும், உலக சமுதாயமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications