சகோதரரை மிரட்டியதாக தா.பாண்டியன் மீது வழக்கு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே இருக்கும் பண்ணை வீட்டிலிருந்து காலி செய்யுமாறு தன்னை சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மிரட்டி வருவதாக அவரது சகோதரர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து தா.பாண்டியன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகில் வத்தலக்குண்டு போகும் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் குடும்பத்தாருக்கு சொந்தமான பண்ணை வீடு இருக்கிறது.
டேவிட் பண்ணை எனப்படும் இந்த வீட்டில் தற்போது தா.பாண்டியனின் சகோதரர் செளந்தரராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந் நிலையில் சமீபத்தில் தா.பாண்டியனின் தூண்டுதலின் பேரில் சுமார் 12 பேர் கொண்ட கும்பல் செளந்தரராஜன் குடியிருந்து வரும் அந்த பண்ணை வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடு தா.பாண்டியனுக்கு சொந்தமானது அதனால் உடனே வீட்டை காலி பண்ணுங்கள் என கூறி மிரட்டியுள்ளனர். வீட்டில் இருந்த குடிநீர் குழாய் இணைப்பையும் அடித்து உடைத்துள்ளனர்.
பயந்து போன தா.பாண்டியனின் சகோதரர் உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், எனது சகோதரர் தா.பாண்டியனும், சகோதரிகள் ராஜாமணி ஜேம்ஸ், பாலின் ஜெயராஜ் ஆகியோரின் தூண்டுதல் காரணமாக சுமார் 12 பேர் வீட்டை காலி செய்யும்படி மிரட்டினார்கள். குடிநீர் குழாய் இணைப்பையும் உடைத்தனர் என கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் தா.பாண்டியன், ராஜாமணி ஜேம்ஸ், பாலின் ஜெயராஜ் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications