பிரபாகரனின் உடல் கிடைத்தது-வீடியோ வெளியீடு

அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் கிடக்கும் வீடியோவையும் ராணுவம் வெளியிட்டுள்ளது.
அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் கிடக்கும் வீடியோக்களையும் (http://videos.filmibeat.com/watch/9909/ltte-prabhakaran-dead-body-found.html) ராணுவம் வெளியிட்டுள்ளது.
நந்திக்குளம் என்ற இடத்தில் அவரது உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நயனகாரா கூறியுள்ளார்.
தனது இயக்க உடையில் உள்ள பிரபாகனின், தலையில் குண்டு பாய்ந்து சிதைந்துள்ளது போல காட்சியளிக்கிறது. ஆனால், அதை மறைக்க தலையில் ராணுவத்தினர் ஒரு ஊதா நிற துணையை வைத்து மறைத்துள்ளனர்.
நந்திக்குளம் என்ற ஒரு சிறிய தீவுத் திட்டில் நீர் நிறைந்த புல் வெளியில் அவரது உடல் கிடந்ததாகவும் ராணுவம் கூறியுள்ளது. உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து எடுக்கப்பட்ட அந்த வீடியோக்களை இலங்கை அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.
இது குறித்து இந்தியத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நயனகாரா, நேற்றே பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாகவும் இன்று தான் உடல் மீட்கப்பட்டதாகவும் கூறினார்.
நேற்று பிரபாகரன் ஒரு வேனில் தப்ப முயன்றபோது இடைமறித்து தாக்குதல் நடத்திக் கொன்றதாகவும், ராக்கெட்டை ஏவியதில் அவரது உடல் எரிந்து போனதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இன்று வெளியிடப்பட்ட வீடியோவில் அவரது உடல் எரிந்து போனதற்கான காயங்கள் ஏதுமில்லை.
மேலும் டிஎன்ஏ சோதனைக்காக உடல் நேற்றே ஹெலிகாப்டரில் கொழும்பு கொண்டு செல்லப்பட்டதாக ராணுவம் கூறியிருந்தது. ஆனால், இன்று தான் அவரது உடலை ஒரு புல்வெளியில் மீட்டதாகக் கூறி வீடியோவை காட்டுகிறது.
இந்த முரண்பாடுகள் குறித்து நயணகாராவிடம் கேட்டதற்கு,
வேனில் தப்பியபோது பிரபாகரனை தாக்கினோம் என்று நாங்கள் சொல்லவில்லை. அவரது உடலை நேற்றே கொழும்பு கொண்டு சென்றதாகவும் நாங்கள் கூறவில்லை. அப்படி ஒரு தவறான செய்தியை சில மீடியாக்கள் தான் வெளியிட்டன. அவர் நேற்று கொல்லப்பட்டா, உடல் இன்று தான் மீட்கப்பட்டது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications