ஒரு வாரம் முன்னதாக துவங்கும் குற்றால சீசன்
குற்றாலம்: கேரளாவில் பருவ மழை இந்தாண்டு ஒரு வாரம் முன்னதாக துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து குற்றால சீசனும் முன்னதாக துவங்கும் என தெரிகிறது.
ஆண்டுதோறும் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் துவங்குவது வழக்கம். கேரளாவில் பெய்யும் தென்மேற்கு பருவ மழையின் ஒரு பகுதியாக மேற்கு தொடர்ச்சி மலையின் மறுபக்கத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெல்லிய சாரலாக மழை பெய்யும். இது குற்றால சீசன் என்று அழைக்கப்படுகிறது.
ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் இந்த சீசன் நீடிக்கும். இதையடுத்து அந்த சமயத்தில் குற்றாலத்தின் குளூமையை அனுபவிக்க தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
கேரளாவில் இந்த ஆண்டு பருவ மழை வழக்கத்தை விட 6 நாட்கள் முன்னதாக அதாவது மே 24ம் தேதி முதல் துவங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் குற்றால சீசனும் இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கும் என தெரிகிறது.
இதை உறுதி செய்வது போல் கடந்த இரு நாட்களாக தென்மேற்கு பருவ காற்று வீசத் துவங்கியுள்ளது. தற்போதைய நிலையில் குற்றாலம் மெயின் அருவி வறண்ட நிலையிலையே காணப்படுகிறது. தீர்த்தம் போல் சிறிதளவு தண்ணீர் கசிந்து வருகிறது. ஆனால், கேரளாவிலும் தொடர்ந்து குளிர் காற்று வீசுவதால், விரைவில் சீசன் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications