வாக்கு பதிவு இயந்திரங்களில் மோசடி-ராமதாஸ்
சென்னை: வாக்குகளை பணம் கொடுத்து வாங்குவது, விற்பது என்ற இழிநிலைக்குப் போய் விட்டது திமுக. இதை நரேஷ்குப்தா தலைமையிலான தேர்தல் அலுவலகம் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
அதே போல வழக்கமாக ஜெயலலிதா மட்டுமே புலம்பும், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடி என்ற புகாரை ராமதாசும் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ராமதாஸ், திமுக இந்தத் தேர்தலில் பெற்ற வெற்றி முறையானதல்ல, நேர்மையானதல்ல. மோசடிச் செயல்களில் ஈடுபட்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர்.
வாக்குகளை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவது மட்டுமே தேர்தல் என்ற புதிய நடைமுறையை திமுக அறிமுகப்படுத்தியுள்ளது.
வாக்குகளை வாங்குவது, விற்பது என்ற இழிநிலைக்குப் போய் விட்டது திமுக. சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும் முறைக்கு அது முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
மக்கள் இந்த தேர்தலில் திமுகவுக்கு விருப்பபப்ட்டு வாக்களிக்கவில்லை. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபித்து அதன் மூலம் மட்டுமே திமுக வாக்குகளை கைப்பற்றியது.
தில்லமுல்லுகளை அரங்கேற்ற, தேர்தல் என்ற வார்த்தைக்கு தீராத பழியை ஏற்படுத்தி விட்டது திமுக.
தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை கண்டு கொள்ளாமல் வெறும் பார்வையாளராக இருந்து விட்டது. நரேஷ்குப்தா என்பவர் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட திமுகவின் மோசடிகளை கண்டு கொள்ளாமல் வெறும் பார்வையாளர்களாக இருந்தது வேதனையானது, வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது.
நவீன் சாவ்லா தலைமையிலான தேர்தல் ஆணையம் நாட்டுக்குத் தேவையில்லாத ஒன்றாகி விட்டது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம், அதிமுகவுடன் இணைந்து திமுகவின் மோசடிகளை மக்களுக்கு அம்பலப்படுத்துவோம் என்றார் ராமதாஸ்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications