பான் கி மூன் 22ம் தேதி கொழும்பு பயணம்
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் வரும் 22ம் தேதி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரமாக இருந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டு வருவது குறித்து பான் கி மூன் கவலை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நீங்களே நேரில் வந்து பாருங்கள் என்று கூறி, இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்சே. இருப்பினும் பான் கி மூன் அதுகுறித்து பதில் ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் வருகிற 22ம் தேதி பான் கி மூன் இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சே அழைப்பை ஏற்று பான் கி மூன் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பான் கி மூன் கொழும்பு வரும் நாளன்று, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வென்றதைக் கொண்டாடும் வகையில் பேரணி ஒன்றை நடத்தவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
கொரில்லா தாக்குதலுக்கு வாய்ப்பு - ஐ.நா.
இதற்கிடையே, தமிழர்களின் மூலப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசு தவறினால், விடுதலைப் புலிகள் கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது என்று ஐ.நா. மனிதாபிமானப் பிரிவு சிறப்பு பிரதிநிதியான ஜான் ஹோம்ஸ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழர்களுக்குப் பொருத்தமான சுயாட்சியை வழங்க அரசியல் முயற்சிகள் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ராணுவ வெற்றியால் எந்தப் பயனும் இல்லை.
போரில் வென்றாலும், தமிழர்களின் மூலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், அது அமைதியைத் தொலைத்து விடும்.
கொரில்லாத் தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட நேரிடும். இதனால் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிகலுக்கு பெரும் சிரமம் ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications