சிபிஎஸ்இ தேர்வு முடிவு-தமிழகத்தில் 95% தேர்ச்சி
சென்னை: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் 95.02 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை மண்டலத்துக்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த மண்டலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, லட்சத்தீவு, கோவா, டாமன், டையூ ஆகியவை இடம்பிடித்துள்ளன.
இதில் 822 பள்ளிகளை சேர்ந்த சுமார் 54 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 49 ஆயிரத்து 711 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 92.06 சதவீதம் பேர் தேர்ச்சி கண்டுள்ளனர்.
தோல்வியடைந்த மாணவர்களில் 2 ஆயிரத்து 848 பேர் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தவர்கள். இவர்கள் வரும் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் மறுதேர்வில் பங்கேற்கலாம்.
தமிழ்நாட்டில் மட்டும் 5,783 பேர் தேர்வு எழுதி, அதில் 5495 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் தேர்ச்சி சதவீதம் 95.02 ஆக இருக்கிறது.
மற்ற தேர்வு முடிவுகளை போல் இதிலும் மாணவிகள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மொத்தம் தேர்வு எழுதிய 2411 மாணவிகளில் 2317 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.10 ஆகும். அதே நேரத்தில் 3372 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 3178 பேர் வெற்றி கண்டுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 94.25 ஆகும்.
மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க ரூ. 100 செலுத்தி முதலில் விடைத்தாள்களை வாங்க வேண்டும், பின்னர் அதனுடன் கொடுக்கப்படும் விண்ணபபம் முழுமையாக பூர்த்தி செய்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications