இந்தோனேசியாவில் விமான விபத்து-78 பேர் பலி
ஜாவா: இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் உள்ள கிராமத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் அதில் பயணம் செய்த 78 பேர் உயிரிழந்தனர்.
இந்த விமானம் இந்தோனேசிய ராணுவத்திற்குச் சொந்தமானதாகும். ஜகார்த்தாவிலிருந்து, ஜாவாவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது, மடியுன் என்ற இடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
வயலில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அருகில் இருந்த கட்டடங்களில் மோதி விமானம் கீழே விழுந்துள்ளது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் தெரியவில்லை. விமானத்தில் 100 பேர் இருந்ததாகவும், இதுவரை 78 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உயிரிழப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த விமானம் சி-130 ரக ஹெர்குலிஸ் விமானம் ஆகும். வழக்கமான பயிற்சியில் அது ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications