இக்கட்டான நிலையிலும் தப்பாமல் சண்டையிட்டு மடிந்த 8 புலிகள்
மட்டக்களப்பு: விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக ஒழிக்கப்பட்ட நிலையிலும், நேற்று இலங்கை முழுவதும் சிங்களர்கள் வெறித்தனமாக தங்களது வெற்றி விழாவைக் கொண்டாடி வந்த நிலையிலும் கடைசி நேரத்திலும் மனம் தளராமல் இலங்கை ராணுவத்துடன் மோதி எட்டு விடுதலைப் புலி போராளிகள் உயிர் நீத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழித்து விட்டதாக ராணுவம் கூறியபோதிலும் இன்னும் கூட சில பகுதிகளில் புலிகள் இருக்கிறார்கள். தொடர்ந்து சண்டையிடும் வேகத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை இது நிரூபிப்பதாக உள்ளது.
நேற்று மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களில் எட்டு விடுதலைப் புலி போராளிகள் ராணுவத்துடன் துணிச்சலாக சண்டையிட்டு மாண்டனர்.
மட்டக்களப்பி்ல் ஐந்து பேர் கொண்ட புலிகள் குழு ராணுவத்துடன் மோதியது. அவர்களை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அதேபோல 3 பேர் அம்பாரையில் ராணுவத்துடன் மோதி உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications