பிரபாகரன்-சட்டக் கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபாகரன் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நடந்து பல்வேறு சம்பவங்களில் சேலம் சட்டக்கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் தீக்குளிக்க முயன்றனர். மேலும் சில இடங்களில் கல்வீச்சு, பஸ் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு போன்ற அசம்பாவிதங்களும் நடந்துள்ளன.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், இதை புலிகள் இயக்கம் ஏற்று கொள்ள மறுத்துவிட்டது. மேலும் வன்னிப் பகுதியில் இருக்கும் அப்பாவி தமிழர்களை படுகொலை செய்ய இது போன்ற திசைதிருப்பும் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. 21 பேருந்துகள் கல்வீச்சில் தேசம் அடைந்துள்ளது. கடைகள் அடைக்கப்பட்டன. சென்னையில் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

தண்டவாளத்தில் தலைவைத்து போராட்டம்...

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சுமார் நேற்று காலை 7.40 மணிக்கு அரக்கோணம் வந்தது. பின்னர் இரண்டாவது நடைமேடையில் ரயில் கிளம்ப தயாராகி கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பிரபாகரன் வாழ்க, ராஜபக்சே ஒழிக என கூறிகொண்டை ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துகொண்டு, போராட்டம் செய்தார். தகவலறிந்த ரயில்வே போலீசார் அந்த நபரை அப்புறப்படுத்தினர். இதையடுத்து ரயில் கிளம்பியது. இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணையில் அரக்கோணத்தை சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் ரகுநாதன் என்றும், அவர் சித்தூர் சட்டக்கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்துள்ளது.

சேலத்தில் மாணவர் தீக்குளிக்க முயற்சி...

சேலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்ள் நேற்று இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்தனர். அவர்கள் ராஜபக்சேவுக்கு எநதிராக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் ராஜபக்சேவின் உருவ பொம்மையை கொளுத்த முயன்றனர்.

இதையடுத்து அதையடுத்து தடுக்கு வந்த போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளு முள்ளு ஏற்பட்டு சிறிது நேரத்தில் அமைதி ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் மீண்டும ராஜபக்சேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அப்போது காமராஜ் என்ற தம்பி பிரபாகரன் என்ற மாணவர் தீக்குளிக்க முயற்சித்தார். உடல் முழுவதும் மண்எண்ணெய் ஊற்றி கொண்டார். இதையடுத்து அருகிலிருந்த மாணவர்கள் அவரை தண்ணீர் தொட்டிக்குள் தூக்கிப்போட்டனர்.

ஆனால் அந்த மாணவர் விடுதி கட்டிடம் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறினர். அப்போதும் அவரை சக மாணவர்கள் காப்பாற்றினர். மூன்று முறை அவரது தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டது.

கொங்கு நிர்வாகிகள் கைது...

கோவையில் கலெக்டர் அலுவலகம் முன்பு இலங்கை தமிழர் பிரச்சினைக்காக சிலர் தீக்குளிக்க போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவர்கள் அனைவரும் சோதனை செய்யப்பட்டனர்.

இந் நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு கொங்கு முன்னேற்ற பேரவை நிர்வாகிகள் மூன்று பேர் கட்சியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்பாவி தமிழர்களை காப்பாற்று, ராஜபக்சே ஒழிக என அவர்கள் குரல் கொடுத்தனர். கையில் வைத்திருந்த மண்எண்ணெய்யை ஊற்றி தீக்களிக்க முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

பெட்ரோல் குண்டுவீச்சு...

ஈரோட்டில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சிவகங்கை அருகே திருபுவனத்துக்கு வந்த போது பஸ்சின் பின்புறத்தில் சில மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசினர். அதில் பஸ்சில் இருந்த மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+