கடைசி கட்ட போரில் 6200 வீரர்கள் பலி: இலங்கை
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான கடைசி கட்டப் போரில் 6200க்கும் மேற்பட்ட வீரரர்கள் பலியாகியுள்ளதாகவும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும், அதிபரின் தம்பியுமான கோதபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி இன்று வரையிலான போரில் ராணுவத்திற்கு ஏற்பட்ட சேதமாம் இது.
நேற்று இலங்கை டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்தார். இலங்கை ராணுவத் தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து இப்போதுதான் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக இலங்கை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்பு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளை கொன்று விட்டதாக கூறியிருந்தது இலங்கை. ஆனால் மொத்தம் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதை அது தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, 1983ம் ஆண்டு முதல் நடந்து வந்த இனப்போரில், 80 ஆயிரம் முதல் 1 லட்சம் மக்கள் வரை உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆசியாவிலேயே நீண்ட காலம் நடந்த இனப்போர் இதுதான் என்றும் அது வர்ணித்துள்ளது.
ஆனால் ஐ.நா.வின் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகளின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 7000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையி்ல் 30 ஆயிரம் வீரர்களை இலங்கை ராணுவம் இழந்துள்ளது.
விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையி்ல் ராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். இந்த வெற்றியைப் பெற நாங்கள் செய்துள்ள தியாகம் மிகப் பெரிது என்றும் கூறியுள்ளார் கோதபய.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications