பன்றிக் காய்ச்சல் சந்தேகம்: சிகிச்சை பெற்று வந்த பயணி திடீர் மாயம்!
கோவை: சார்ஜாவில் இருந்து கோவை வந்த பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவர் திடீரென்று தப்பி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சார்ஜாவில் இருந்து ஏர்-அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது, பயணி ஒருவருக்கு பன்றிகாய்ச்சல் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இதனால் உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு பன்றிகாய்ச்சல் சிறப்பு சிகிச்சை மையத்தில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவமனை ஆர்.எம்.ஓ சிவப்பிரகாசம் செய்தியாளர்களிடம் கூறியதாவது
சார்ஜாவில் இருந்து வந்தவர் கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர்.
கட்டுமான தொழிலாளியான அவருக்கு தொண்டை வலி மற்றும் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டது.
இதனால் அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சிகிச்சைக்காக டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து கோவை வந்த தாய், மகனுக்கு பன்றிகாய்ச்சல் அறிகுறி இருந்ததாக றப்பட்டது.
இதனால் அவர்களுக்கு மருத்துவ குழுவினர் செய்த ரத்தப் பரிசோதனையில் பன்றி காய்ச்சல் இல்லை என தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
ஆனால் தற்போது கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற வந்தவர் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகின்றது. இதனால் மருத்துவ மனையில் பரபரப்பு நிலவி வருகின்றது.
தப்பிச் சென்ற நபர் குறித்து போலீசாரிடம் மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்ட்டுள்ளதாகவும், இதனால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருதாகவும் கூறப்படுகின்றது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications