இலவச இதய ஆபரேஷன்-2 மாணவர்கள் மரணம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழக அரசின் இளம் சிறார் இதய பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இலவச இதய அறுவைச் சிகிச்சை செய்த பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக இறந்தனர்.

தமிழக அரசு சார்பில் இளம் சிறார் இதய பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம் இதய நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், குழந்தைகளை கண்டறிந்து மாவட்ட மருத்துவத் துறை மூலம் அக் குழந்தைகளுக்கு, ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான இலவச இதய அறுவைச் சிகிச்சை செய்யப்படு வருகின்றது.

இந்த திட்டத்தின் கீழ், திண்டுக்கல் அருகே உள்ள குஜிலியம்பாறை அடுத்த செப்புருட்டுப்பட்டி சண்முகம் என்பவரது மகன் சதீஷ்குமார் (10), வேல்முருகன் என்பவரது மகன் முனியப்பன் (9), சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்த பாண்டிமீனா (8), எஸ்.புதுக்கோட்டை ராஜேஷ் (12), குஜிலியம்பாறை விமல்ராஜ் (5) உட்பட எட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

இதில், சண்முகம் மகன் சதீஷ்குமார், இரண்டு நாட்களுக்கு முன், திடீரென வயிறு எரிவதாகவும், பார்வை தெரியவில்லை எனவும் கூறி, மூச்சு திணறி இறந்தார்.

இதே போன்று, வேல்முருகன் மகன் முனியப்பனும் இறந்தார்.

ஒரே ஊரில் இலவச இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட, இரண்டு மாணவர்கள் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+