நாடாளுமன்ற அதிமுக தலைவராக தம்பித்துரை தேர்வு - ராஜ்யசபாவுக்கு மைத்ரேயன்
சென்னை: அதிமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக தம்பித்துரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜ்யசபா கட்சித் தலைவராக டாக்டர் மைத்ரேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
அ.தி.மு.க. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில், அ.தி.மு.க. நாடாளுமன்ற குழு, மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற குழு தலைவர் - மு.தம்பிதுரை, துணைத் தலைவர் - டாக்டர் மைத்ரேயன்.
மக்களவை குழு தலைவர் - மு.தம்பிதுரை, துணைத் தலைவர் - செ.செம்மலை, கொறடா - ஓ.எஸ்.மணியன், பொருளாளர் - சி.ராசேந்திரன், செயலாளர் - டாக்டர் பி.வேணுகோபால்.
மாநிலங்களவை குழு தலைவர் - டாக்டர் மைத்ரேயன், துணைத் தலைவர் - கே.மலைச்சாமி, கொறடா - நா.பாலகங்கா, பொருளாளர் - எஸ்.அன்பழகன், செயலாளர் - என்.ஆர்.கோவிந்தராஜன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications