சம்பளம் கொடுங்க - சத்துணவு ஊழியர்கள் புலம்பல்!
கரூர்: கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு முறையான ஊதியம் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட மையக்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வேம்புசாமி தலைமை வகித்தார்.
அப்போது அச் சங்கத்தின் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், சத்துணவு ஊழியர்களுக்கு மட்டும் மாதக் கடைசியில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது. ஆனால், மாத ஊதியம் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோன்றி மலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள சத்துணவு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை.
இதனால், குறைந்த ஊதியத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் சத்துணவு ஊழியர்கள் தினசரி வாழக்கை சூழலில் வாழமுடியாமல் தவி்த்து வருகின்றோம்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஆணையர், ஆட்சியரின் சத்துணவு நேர்முக உதவியாளர்களிடம் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை ஊதியம் வழங்ககப்படவில்லை என்று வேதனை தெரிவித்தார்.
கூட்ட முடிவில், மாவட்ட கலெக்டர் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications