For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேபாள பிரதமராக மாதவ் நேபாள் பதவியேற்பு

By Staff
Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாள நாட்டின் புதிய பிரதமராக பழம்பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் மாதவ் நேபாள் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ராணுவ தளபதி நீக்கம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து பிரசந்தா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அடுத்த பிரதமர் யார் என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது.

ஒரு வார காலமாக நிலவி வந்த அரசியல் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று மாதவ் நேபாள் பிரதமர் பதவியேற்றார்.

56 வயதாகும் நேபாளுக்கு அதிபர் ராம் பரன் யாதவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நான்கு அல்லது ஐந்து அமைச்சர்கள் இன்று பிற்பகலுக்கு மேல் பதவியேற்பார்கள் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X