பாமக தோற்றது மகிழ்ச்சி அளிக்கிறது-பாஜக

Subscribe to Oneindia Tamil

சேலம்: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாநில பாஜக தலைவர் இல.கணேசன் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் இல.கணேசன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் பாஜக வெற்றி பெறாதது வருத்தம் அளிக்கிறது. அதே சமயம் இந்த தேர்தலில் மாநில கட்சிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதுவும் நடைபெறவில்லை. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அல்லது பாஜகவுக்குத் தான் வாய்ப்பு அளிப்பது என்று மக்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது பாஜக முக்கியமான எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பாராதவிதமாக கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதனால் காங்கிரஸ் கட்சியினர் திமுகவை பொருட்படுத்தவில்லை. இந்த சூழ்நிலையை பார்த்தால், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டே சட்டசபை தேர்தல் வரும் வாய்ப்புள்ளது.

தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் அவர்கள் இவ்வளவு காலமும் கூட்டணி பலத்தால்தான் ஜெயித்துள்ளனர் என்பதும், அவர்களுக்கென தனி பலம் இல்லை என்பதும் நிரூபணமாகிவிட்டது.

நேற்று ஒரு கட்சி, இன்று ஒரு கட்சியுடன் கூட்டணி என்று அவர்கள் தாவியதால் மக்கள் அவர்களை நம்பவில்லை.

தேர்தலின்போதும், ஓட்டு எண்ணிக்கையின் போதும், மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அவ்வாறு அதில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்பதை தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும்.

மத்திய அமைச்சரவையில் சேருவது குறித்து திமுக உயர்நிலை குழு கூடி முடிவெடுக்கும் என்று கூறிய முதல்வர் கருணாநிதி, அப்படிச் செய்யாமல் தனது குடும்பத்தினருடன் மட்டும் கலந்து பேசி முடிவு செய்துள்ளார். குடும்ப அரசியல் காரணமாக திமுக பலமிழந்துள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரசும், திமுகவும் இணைந்து கண்துடைப்பு நாடகம் நடத்துகின்றன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 2.06 சதவீத வாக்குகள் பெற்ற பாஜக, மக்களவைத் தேர்தலில் 6.68 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+