தூங்கும் இட தகராறு-வியாபாரியை கொன்ற பிச்சைக்காரர்
திருச்சி: திருச்சி அருகே தூங்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக வியாபாரி ஒருவரை பிச்சைக்காரர் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே கிராப்பட்டியை சேர்ந்த சர்புதீன் என்பவரின் மகன் முகமது ரபீக் (38). இவரது மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து அவர் தனது குழந்தைகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பி விட்டார். அவர் மட்டும் திருச்சியில் தங்கியிருந்து பேருந்து நிலையத்தில் புத்தகம் மற்றும் மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார்.
மனைவி இறந்ததை அடுத்து அவர் குடிபழக்கத்திற்கு ஆளானார். வீட்டு செல்லுவதை தவிர்த்துவிட்டு இரவு கிராப்பட்டி கிறிஸ்தவ கல்லறை பகுதியில் மரத்தடியில் படுத்து தூங்கி விடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
இந்நிலையில் ரபீக்கை கடந்த 25ம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்தார்.
இந் நிலையில் திருச்சி கிராப்பட்டி அண்ணாநகர் பின்புறம் உள்ள புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது ரபீக் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கொன்றது யார் என்பது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில் போலீசார் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். ரபீக்கை கொன்றது கேரளாவை சேர்ந்த சாஜி (32) என்பவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி பகுதியில் பிச்சை எடுத்து வரும் சாஜி வழக்கமாக கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் தான் படுத்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக ரபீக்கும் அங்கு வந்து தூங்கியதை அடுத்து இருவருக்கும் இடையை சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சாஜி, ரபீக்கை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதையடு்த்து போலீசார் சாஜியை கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications