திருப்பதி மலையை சுற்றி 100 கிமீ இரும்பு வேலி!
திருப்பதி: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி திருமலையை சுற்றிலும் சுமார் 100 கி.மீ. தூரத்துக்கு இரும்பு வேலியை அமைக்க ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மிக அதிகமான பக்தர்கள் கூடும் இடமான திருப்பதி கோவிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ருந்து வருகிறது. இது குறித்து மத்திய உளவுத்துறை ஆந்திர அரசுக்கும், திருமலை தேவஸ்தானத்துக்கு அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வருகிறது.
அச்சுறுத்தல் இருக்கும் சமயங்களில் போலீசார் குவிக்கப்படுவதும், பின்னர் சில நாட்கள் கழித்து பாதுகாப்பு குறைக்கப்படுவதுமாக உள்ளது.
இப்படி அடிக்கடி பந்தோபஸ்தை கூட்டுவதும், குறைப்பதுமாக இருப்பதற்கு பதிலாக திருப்பதியை சுற்றிலும் எப்போதும் இருக்கும் வகையில் முழு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், திருப்பதி மலையை பாதுகாப்புப் பகுதியாக மாற்றவும் ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் திருமலையை சுற்றி அடர்ந்த காடுகள் இருப்பதால் தீவிரவாதிகள் அதன் வழியாக நுழைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இதையடுத்து மலையை சுற்றிலும் சுமார் 100 கிமீ தூரத்துக்கு இரும்பு வேலி அமைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் ஆந்திர முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
மேலும், இதற்கான திட்டப் பணிகளை ஆராய மாநில உளவுத்துறை டிஐஜி அரவிந்தராவ், மாநில பாதுகாப்பு பிரிவு ஐஜி அனுமந்தராவ், போலீஸ் சூப்பிரண்டு ஜேஜே முரளி, சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமா ரெட்டி ஆகியோர் தலைமையிலான குழுக்கள் அமைத்துள்ளார்.
இதையடுத்து இக்குழுவினர் திருப்பதி-திருமலை பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications