வடக்கை விட அதிக அமைச்சர்களை பெற்ற தெற்கு!
டெல்லி: புதிய அமைச்சரவையில் வட மாநிலங்களை விட தென் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் 59 அமைச்சர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.
இளம் அமைச்சர்...
புதிய அமைச்சரவையின் இளம் அமைச்சர் என்ற பெருமையை பெண் எம்.பியான அகாதா சங்மா பெற்றுள்ளார். 28 வயதான இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியி்ன் மூத்த தலைவர் பி.ஏ.சங்மாவின் மகள்.
புதிய அமைச்சரவையின் வயதான அமைச்சராக 77 வயது காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா இருக்கிறார். ஒட்டுமொத்த அமைச்சரவையின் சராசரி வயது 62க்கு சற்று அதிகம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் எம்.பி.க்களில் நான்கில் ஒருவருக்கு அமைச்சர் யோகம் அடித்துள்ளது.
தமிழகம் அதிகம்-ஆந்திரா குறைவு...
வட மாநிலங்களை விட தென் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அதிக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருக்கும் 11 காங்கிரஸ் எம்.பி.க்களில் 4 பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. கேரளாவில் இது 16க்கு 6ஆக இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் 28 ஐக்கிய முற்போகுக் எம்.பி.க்களில் 9 பேருக்கு அமைச்சர் அந்தஸ்து கிடைத்துள்ளது.
தென் மாநிலங்களில் குறைந்தபட்சமாக ஆந்திராவுக்கு 4 அமைச்சர்கள் மட்டுமே கிடைத்துள்ளனர்.
தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் விலாஸ்ராவ் தேஷ்முக், எஸ்.எம்.கிருஷ்ணா இருவரும் நாடாளுமன்றத்தின் இரு சபையிலும் உறுப்பினராக இல்லை. அவர்கள் இனி மேல் எதாவது ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கின்றனர்.
கடந்த முறை அமைச்சராக இருந்தவர்களில் அர்ஜூன் சிங், சிவராஜ் பாட்டீல், டிஆர் பாலு, ஆஸ்கர் பெர்ணான்டஸ், சிஸ் ராம் ஓலா உள்ளிட்டோருக்கு தற்போது அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
அதிக தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தர பிரேதசத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவருக்கும் கூட கேபினட் அந்தஸ்து வழங்கப்படவில்லை.
அமைச்சரான முதல்வர்கள்...
புதிய அமைச்சரவையில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 10 பேர் தலித்துக்கள், 9 பேர் பெண்கள் மற்றும் 5 பேர் இஸ்லாமியர்கள். அதேபோல் முன்னாள் முதல்வர்கள் 9 பேருக்கும், 4 முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்களுக்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
அமைச்சர் பதவியில் இடம்பிடித்துள்ள இளம் தலைமுறை எம்.பி.க்கள் அனைவரும் வாரிசு அரசியல் மூலம் வந்தவர்கள்.
அமைச்சரவையில் திரிணமுல் காங்கிரசுக்கு 7, திமுகவுக்கு 7, தேசியவாத காங்கிரசுக்கு 3 மற்றும் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்











Click it and Unblock the Notifications