துணை முதல்வரானார் மு.க.ஸ்டாலின்-ஆளுநர் அறிவிப்பு!

இதுவரை முதல்வர் கருணாநிதி கவனித்து வந்த பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், தொழில், சிறுபான்மை நலம், பாஸ்போர்ட், சமூக சீர்திருத்தம் ஆகிய துறைகளை இனிமேல் ஸ்டாலின் கவனிப்பார் என்றும் ஆளுநர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் பதவியில் அமர்த்தப்படுவார் என சமீப காலமாக பேச்சு அடிபட்டு வந்தது.
இந் நிலையில் இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், கடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஏற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படுகிறார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி அளித்த பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது. விரைவில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக...
தமிழகத்தில் இதுவரை துணை முதல்வராக யாரும் பதவி அமர்த்தப்பட்டதில்லை.
இந் நிலையில் தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
உடல் நலம் காரணமாக விரைவில் ஸ்டாலினிடம் தனது பொறுப்பை ஒப்படைத்து விட்டு முதல்வர் கருணாநிதியே பதவி விலகக் கூடும் எனவும் பேச்சு அடிபட்டு வருகிறது. இந்த நிலையில், ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications