மந்தகதியில் 4 வழிச் சாலை பணி-போக்குவரத்தால் திணறும் திருச்சி
திருச்சி: சென்னை-மதுரையை இணைக்கும் நான்கு வழிச்சாலை பணிகள் திருச்சி பகுதிகளில் மிக மந்தமாக நடப்பதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சென்னை, மதுரை இடையில் பயணிக்கும் வாகனங்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றன.
தமிழகத்தில் உள்ள 4,247 கிமீ., தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகின்றன. இதில் 2,999 கிமீ தூரத்தை தேசிய நெடுஞ்சாலை துறையும், 1,248 கிமீ தூரத்தை தமிழக நெடுஞ்சாலை துறையும் விரிவுபடுத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருச்சி வழியாக செல்லும் சென்னை-மதுரை நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதில் சென்னை முதல் திண்டிவனம் ஏற்கனவே நான்கு வழிச்சாலை இருப்பதால் மீதமுள்ள 328 கிமீ தூரத்துக்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் பணிகள் 70 கிமீ., தூரம் கொண்ட திண்டிவனம்- உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை-பாடலூர்(93 கிமீ), பாடலூர்-திருச்சி (40 கிமீ), திருச்சி-துவரங்குறிச்சி (61 கிமீ), துவரங்குறிச்சி-மதுரை (64 கிமீ) என ஐந்து கட்டங்களாக பிரித்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த வழியில் 10 பை-பாஸ் சாலைகளும், 14 பெரிய பாலங்களும், 8 ரயில்வே பாலங்களும் கட்டப்படுகின்றன.
கடந்த 2007ல் ஆரம்பமான இந்த பணிகள் தற்போது முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். சமயபுரம் முதல் திருச்சி வரை உள்ள பகுதிகளை தவிர்த்த மற்ற பகுதிகளில் வேலைகள் கிட்டதட்ட நிறைவு பெற்றுவிட்டன.
ஆனால், சமயபுரம்-திருச்சி பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடந்து வருகிறது.
இதனால் சுமார் 20 கிமீ தூரத்துக்கு சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இதனால் சென்னை-மதுரை பயணத்தில் சுமார் 1 மணி நேரம் வரை கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications