நின்ற லாரி மீது கார் மோதல் - 3 பேர் பலி
மதுரை: மதுரை ரிங்ரோட்டில் உள்ள மண்டேலா நகர் அருகே நள்ளிரவு 12 மணி அளவில் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியை சேர்ந்தவர் ஜான்சாமுவேல். இவரது மகன் ஜெயசெல்வம் (30).
அதே பகுதியை சேர்ந்த சந்தனராஜ் (30), போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சண்முகத்தின் மகன் வேல்பாண்டி (30), கே.டி.சி. நகரை சேர்ந்த பச்சைமால் (25), தூத்துக்குடியை சேர்ந்த ஐசக் (24) ஆகியோர் சென்னைக்கு ஒரு காரில் சென்றனர்.
மதுரை ரிங்ரோட்டில் உள்ள மண்டேலா நகர் அருகே நள்ளிரவு 12 மணி அளவில் சென்று கொண்டிருந்த போது ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இதனால் காரில் இருந்த ஜெயசெல்வம், வேல் பாண்டி, பச்சைமால் ஆகிய மூன்று பேரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுக்குள் சிக்கி இருந்த மூன்று பேரின் சடலத்தை மீட்டனர்.
அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications