சாலையில் கிடந்த நல வாரிய விண்ணப்பங்கள்!
நாமக்கல்: நாமக்கல் அருகே சாலையில் சிதறிக் கிடந்த நலவாரிய விண்ணப்பங்களால் பொது மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்-சேலம் சாலையில் காகித மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது.
லாரி உரிமையாளர் சங்கம் அருகே செல்லும் போது லாரியில் இருந்த மூட்டைகளில் இருந்து ஏராளமான காகிதங்கள் கொத்து கொத்தாக கீழே சிதறி விழுந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் லாரியை நிறுத்தக் கோரி கூச்சல் போட்டனர். ஆனால் லாரி நிற்காமல் சென்று விட்டது.
இதனால் லாரியில் இருந்து கீழே விழுந்த காகிதங்களை பொது மக்கள் சேகரித்த பார்த்த போது அவைகள் நலவாரியத்துக்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்கள் என்பது தெரிய வந்தது.
பெரும்பாலான விண்ணப்பங்கள் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவையாக இருந்தன. உடல் உழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்திருந்த தொழிலாளர்களின் புகைப்படம் மற்றும் அனைத்து விவரங்களும் இதில் இடம் பெற்றிருந்தன.
இந்த விண்ணப்பங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்த பிறகு கழிவுக்காக கொண்டு செல்லப்பட்டவையா அல்லது நலவாரிய ஆவணக் காப்பகத்துக்காக கொண்டு செல்லப்பட்டவையா என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
அரசிடம் வழங்கிய விண்ணப்பங்கள் கேட்பாரற்று சாலையில் சிதறி கிடந்தது பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications