ஜெவுக்கு எதிராக களமிறக்கப்படும் கனிமொழி?

எதிர்காலத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் களமிறக்கப்படுவாராம் கனிமொழி.
41 வயதாகும் கனிமொழி ஆரம்பத்தில் கவிஞராக மட்டுமே அறியப்பட்டவர். எனது கலையுலக வாரிசு என்று கருணாநிதியால் அறிவிக்கப்பட்டவர். ஆனால் 2007ல் திடீரென நடந்த சில சம்பவங்களால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார் கனிமொழி.
மாறன் குடும்பத்துடன் ஏற்பட்ட மோதல், அதனால் டெல்லியில் ஏற்பட்ட வெற்றிடம். இதை நிரப்ப அரசியலுக்கு வந்தவர்தான் கனிமொழி.
இந் நிலையில் இப்போது மாறன் குடும்பத்தினர், கருணாநிதி குடும்பத்தினருடன் சமரசமாகி விட்டனர். தயாநிதி மாறனும் மீண்டும் மத்திய அமைச்சராகி விட்டார். அதை விட முக்கியமாக மு.க.அழகிரியும்.
தற்போது மாநில அரசியலுக்கு மு.க.ஸ்டாலின், டெல்லி அரசியலுக்கு மு.க.அழகிரி-தயாநிதி என திட்டம் வகுக்கப்பட்டுவிட்டது.
கனிமொழியும் மத்திய அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதை விட முக்கியமான பணியை அவருக்கு கொடுக்க கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அது- ஜெயலலிதாவுக்கு எதிராக திமுகவின் பீரங்கியாக கனிமொழி முதன்மைப்படுத்தப்படவுள்ளார் என்பதே.
ஜெயலலிதாவுக்கு இணையாக திமுகவில் எந்தப் பெண் தலைவரும் இல்லை. அதை கனிமொழி நிரப்புவார் என்கிறார்கள்.
இதுகுறித்து கனிமொழி கூறுகையில், கட்சியை அடிமட்டத்திலிருந்து புதுப்பிக்கும் பணியை நான் தொடங்குவேன். இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. கட்சியை பலப்படுத்த குறிப்பாக மகளிர் அணியை பலப்படுத்த நான் தீவிரமாக உழைக்கப் போகிறேன் என்றார் கனிமொழி.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications