துப்பாக்கியை காட்டி மிரட்டிய பாமகநிர்வாகி கைது!
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பாமக ஒன்றிய சேர்மன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் பாமகவைச் சேர்ந்த சந்திரசேகர் ஒன்றிய சேர்மனாக உள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமன் மகன் செந்தில்குமார் கள்ளக்குறிச்சி குளத்து மேட்டுத் தெருவில் புதிதாக பல் மருத்துவமனை கட்டி வருகிறார்.
அரசுக்கு சொந்தமான டாடா சுமோவில் சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் சந்திரசேகர், கள்ளக்குறிச்சி நகர பா.ம.க. செயலாளர் மாரியப்பன், ராஜா, ஜெயராம கிருஷ்ணன் மற்றும் அடையாளம் தெரியாத ஆறு பேர் நேற்று முன்தினம் செந்தில் குமாரிடம் சென்று, தங்களுக்கு சொந்தமான இடம் இது, இங்கு மருத்துவமனை கட்ட கூடாது என்று மிரட்டியாக புகார் எழுந்தது.
இந் நிலையில், துப்பாக்கியை காட்டி மிரட்டி 50 லட்சம் ரூபாய் உடனே கொடுக்கவில்லை என்றால் உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக கூறியதாக கள்ளக்குறிச்சி நகர பா.ம.க. செயலாளர் மாரியப்பன், ராஜா, ஜெயராம கிருஷ்ணன் மற்றும் அடையாளம் தெரியாத ஆறு பேர் மீது செந்தில்குமார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து சேர்மன் சந்திரசேகர், நகர செயலாளர் மாரியப்பன் இருவரையும் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் உதயக்குமார் கைது செய்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications