ஆஸி இனவெறியர்களால் எனது மகன் பலி - ஹர்பஜன் உறவினர்
ஜலந்தர்: இந்திய கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் உறவினர் மகன், ஆஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங்கின் உறவினரான ஜகத்சிங் கூறுகையில், எனது 26 வயது மகன் உப்கார் சிங் பப்பால், 2004ம் ஆண்டு ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றான். அங்கு அதே ஆண்டு மே 7ம் தேதி இனவெறியர்களால் தாக்ப்பட்டு கொல்லப்பட்டான்.
ஆஸ்திரேலிய டாக்சி டிரைவர் ஒருவர், எனது மகனை அடித்துக் கொன்று, மெல்போர்ன் ரயில்வே டிராக்கில் எனது மகனின் உடலைப் போட்டதாக அங்குள்ள எனது நண்பர்கள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்களை இனவெறியர்கள் துன்புறுத்துவது குறித்து எனது மகன் பலமுறை கூறியுள்ளான். இப்போது அது வெளியுலகுக்கு பெரிய அளவில் அம்பலமாகியுள்ளது.
தற்போதைய இனவெறித் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும்போது, எனது மகன் கொல்லப்பட்டது குறித்தும் இந்திய அரசு விசாரிக்க வேண்டும்.
எனது மகனின் உடலைப் பிரேதப் பரிசோதனை கூட செய்ய ஆஸ்திரேலிய போலீஸார் மறுத்து விட்டனர். இதனால் அங்கிருந்த எனது நண்பர்கள்தான் எனது மகனின் உடலை இங்கு அனுப்பி வைத்தனர்.
இனவெறியர்களால் கொல்லப்பட்ட போதிலும், எனது மகன் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக ஆஸ்திரேலிய போலீஸார் தெரிவித்தனர் என்று கூறியுள்ளார் சிங்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications