கள் இறக்கினால், கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் தண்டனை: அரசு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டவிரோதமாக கள் இறக்குவது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்றவற்றில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை..

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக தொடர்ந்து அரசுக்கு தகவல் வந்து கொண்டிருக்கிறது.

பனைத் தொழிலாளர்களின் முக்கிய எதிர்பார்ப்புகளை விரிவாக ஆய்வு செய்து சட்டப்படி ஆவன செய்வதற்கு அரசு தரப்பில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று நாடாளுமன்ற தேர்தலையொட்டி அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின் படி அரசின் சார்பில் குழு அமைத்து அந்த குழு ஆய்வு செய்து அரசுக்கு விரிவான அறிக்கை அளித்து, அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை மேற்கொண்டு அறிவித்திடும் வரை, தென்னை, பனைத் தொழிலாளர்கள் அமைதி காத்திட வேண்டும், சட்டத்திற்கு புறம்பான எந்த வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சட்டத்தைப் புறக்கணித்து விட்டு, கள் இறக்குவோர் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீது கடுமையான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+