பஞ்சாப் மாகாணத்தைப் பிடிக்க தலிபான்கள் முயற்சி - ஷாபாஸ் கான்
லண்டன்: பஞ்சாப் மாகாணத்திற்குள் ஊடுறுவி அதைப் பிடிக்கும் முயற்சியில் தலிபான் தீவிரவாதிகள் தீவிரமாக உள்ளதாக பஞ்சாப் மாகாண முதல்வரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியுமான ஷாபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இதுகுறித்து லண்டன் சண்டே டைம்ஸ் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பஞ்சாப் மாகாணத்திற்குள் நுழைவதே தலிபான் தீவிரவாதிகளின் முக்கிய நோக்கமாக உள்ளது. ஸ்வாத்தில் தங்களது செயல்பாடுகளை விட்டு விட்டு பஞ்சாபுக்கு இடம் பெயரும் எண்ணத்திலும் அவர்கள் உள்ளனர்.
தலிபான்களின் எண்ணத்தை முறியடித்து அவர்களை தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இருப்பினும் ஒரே நாள் இரவில் இதை செய்து விட முடியாது.
நமது சமுதாயத்தை தீவிரவாதம் ஆக்கிரமித்துக் கொள்ள விடக் கூடாது என்ற கருத்தில் நாடு முழுமையும் உள்ளது. இது மிகப் பெரிய வெற்றியாகும் என்றார் அவர்.
தலிபான்களுக்கு எதிராக ராணுவம் தற்போது கடும் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில், நேற்று ஸ்வாத் பள்ளத்தாக்கில் உள்ள மிங்கோரா என்ற நகரை தலிபான்களிடமிருந்து அரசுப் படைகள் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications