கருணாநிதியின் 86வது பிறந்த நாள்
சென்னை: முதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்த நாளையொட்டி திமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணி சார்பில், மாபெரும் விழா நாளை சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது.
கருணாநிதியின் பிறந்த தினம் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை மகளிர் அணி சார்பில் விழா நடக்கிறது.
மகளிர் பார்வையில் கலைஞர்..
நாதசுர இசையுடன் நாளை காலை 9.30 மணிக்கு இந்த விழா தொடங்குகிறது. இதையடுத்து, மகளிர் பார்வையில் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடக்கிறது. துணை பொது செயலாளர் சற்குண பாண்டியன் தலைமை வகிக்கிறார்.
அமைச்சர்கள் கீதாஜீவன், பூங்கோதை, தமிழரசி, மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ்.பாபு, ஹெலன் டேவிட்சன் எம்பி, பகுதி செயலாளர் மதன்மோகன், வட்ட செயலாளர் எல்லீஸ் ராஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கருத்தரங்கை, கனிமொழி எம்பி தொடங்கி வைக்கிறார்.
பட்டிமன்றம்...
பகல் 12 மணிக்கு தமிழினத் தலைவர் கலைஞரின் தொடர் வெற்றிக்கு பெரிதும் காரணம் அவரது கொள்கையா? சாதனையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. இதை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தொடங்கி வைக்கிறார். இந்திரகுமாரி நடுவராக பணியாற்றுகிறார்.
தலைமை இலக்கிய அணி சார்பில், மாலை 4 மணிக்கு மயிலை தேவன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதை தொடர்ந்து 5.30 மணிக்கு, கவிமலர் படைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு தமிழ்வேள் கலைஞர் இலக்கியப் பொற்கிழி வழங்கல் மற்றும் வாழ்த்தரங்கு நிகழ்ச்சி நடக்கிறது. தஞ்சை கூத்தரசன் வரவேற்கிறார். வேழவேந்தன் தலைமை வகிக்கிறார்.
சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன், சிங்கப்பூர் தமிழ் தொண்டர் போப்ராஜ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.
அமைச்சர் க.அன்பழகன், கயல் தினகரன் பொற்கிழி பெறுபவரின் தகுதி உரையை படித்து, ரூ.10 ஆயிரம் தொகை மற்றும் கேடயம் அடங்கிய தமிழ்வேள் கலைஞர் இலக்கியப் பொற்கிழியை காரைக்குடி அஞ்செழுத்து என்பவருக்கு வழங்கி பேசுகிறார்.
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி, கே.என்.நேரு, எ.வ.வேலு மற்றும் குன்னக்குடி பொன்னம்பல அடிகளார், புலவர் நன்னன், செல்வ கணபதி, தென்னவன் ஆகியார் வாழ்த்திப் பேசுகின்றனர். முடிவில் பூச்சி முருகன் நன்றி கூறுகிறார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications