கருணாநிதி குறித்து அவதூறு-வைகோ மீது வழக்கு
சென்னை: முதல்வர் கருணாநிதியை அவதூறாகப் பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மே மாதம் 16-ம் தேதி சென்னை அண்ணா சாலை பார்சன் காம்பளக்சில் உள்ள டைரக்டர் பாரதிராஜாவின் அலுவலகம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புரசைவாக்கம் தானா தெருவில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, முதல்வரின் தூண்டுதலால்தான் டைரக்டர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டது என்று முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவதூறாக வன்முறையை தூண்டும் வகையில் கூறினார்.
இதுதொடர்பாக வேப்பேரி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே கூட்டத்தில் நேரத்தைத் தாண்டி பேசியதாக கூறி பழ. நெடுமாறன் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications