மருந்து விலை குறையும்-அழகிரி
டெல்லி: ஏழை நோயாளிகள் பயன்பெறும் வகையில் மருந்து மாத்திரை பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படும். எப்படி குறைப்பேன் என்பது ரகசியம். பொறுத்திருந்து பாருங்கள் என மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை தொகுதியில் இருந்து முதன் முதலாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக தென்மாவட்ட அமைப்பாளர் அழகிரி தற்போது டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
நேற்று தனது துறையின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினர். தனது பார்வையின் கீழ் விவகாரங்களையும், பொறுப்புகளையும் அறிந்து கொண்டார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
விவசாயிகளுக்கு மானிய விலையில் தேவையான உரங்கள் கிடைக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.
உர உற்பத்தியை நவீனப்படுத்தி, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். மூடப்பட்டுள்ள பல உர ஆலைகள் திறக்கப்படும். அவை சீரமைக்கப்பட்டு உற்பத்தி பெருக்கப்படும். பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் விநியோகம் சீராக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்
மருந்து பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் ஏழை நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் குறைகளை போக்கும் வகையில் மருந்து, மாத்திரை போன்றவை நியாயமான விலையில் எந்த தட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கும். இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மருந்து மற்றும் மாத்திரை உற்பத்தியில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். புதிய உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். மேலும் இந்த துறையில் மனித ஆற்றலை விரிவுபடுத்தி, வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
கடந்த முறை இப்பதவியில் இருந்த ராம் விலாஸ் பஸ்வான் பல முறை முயன்று அவரால் முடியவில்லை. உங்களால் எப்படி முடியும் என கேட்கிறார்கள். நான் எப்படி குறைப்பேன் என்பது ரகசியம். பொறுத்திருந்து பாருங்கள் என்றார் அழகிரி.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications