காங்கிரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது தவறு-சிபிஐ
டெல்லி: மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் நலத்திட்டங்கள் சிறப்பாக நடைபெற முக்கிய காரணகர்த்தவாக இருந்த எங்களின் உழைப்பு மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இது தான் நாங்கள் செய்த தவறு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் ஏ.பி. பரதன் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி கடந்தாண்டு மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது. மேலும், தேர்தலுக்கு பின் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சி அமைப்போம் என பெருமையடித்து வந்தது.
ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் தீர்ப்பு அதற்கு நேர்மாறாக இருந்தது. கம்யூனிஸ்ட் தலைமையிலான மூன்றாவது அணிக்கு பெருத்தி பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பரதன் கூறுகையில்.
கடந்த ஆட்சியின் முதல் நான்கரை ஆண்டுகள் கம்யூனிஸ்ட்டுகள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட முக்கிய காரணமாக இருந்தனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம், பழங்குடியினருக்கான வன உரிமை சட்டம் போன்றவற்றை கொண்டு வந்தோம்.
ஆனால், கடைசி ஆறு மாதத்துக்கு முன்பாக மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் நலத்திட்டங்கள் சிறப்பாக நடைபெற முக்கிய காரணகர்த்தவாக இருந்த எங்களின் உழைப்பு மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. இது தான் நாங்கள் செய்த தவறு.
தேர்தலில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத் தான் மக்கள் வாக்களித்துள்ளனர். அணுசக்தி ஒப்பந்தத்தை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை என்றார் பரதன்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications