இந்தியாவை குறிவைக்கும் ஜெனரல் மோட்டார்ஸ்!
டெல்லி: ஜெனரல் மோட்டார்ஸ் எனப்படும் ஜிஎம் நிறுவனம் அமெரிக்காவில் திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு, சட்டப்படி அமெரிக்க அரசின் கைகளுக்குப் போய்விட்டது.
ஆனால் அதற்காக அதன் இந்திய தொழிற்சாலைகளில் உற்பத்தி முடங்கிப் போகவில்லை. மாறாக இந்த ஆண்டு ரூ. 2 லட்சம் விலை கொண்ட சிறிய ரக கார்களை இந்தியாவில் விற்பனைக்கு விடப்போகிறது ஜிஎம்.
ஜிஎம் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் நிக் ரெய்லி இதுகுறித்து கூறுகையில், ஜிஎம்மின் இந்தியத் தொழிற்சாலைகளில் விரைவில் இந்த குறைந்த விலைக் கார்களை தயாரிக்கத் துவங்கவிருக்கிறோம். இந்தக் கார்கள் உலகம் முழுக்க விற்பனைக்கு விடப்படும். அதே நேரம் இந்தியாவில் அதை ரூ.2 லட்சத்துக்கு தரும் திட்டமுள்ளது.
எங்களது முந்தைய தயாரிப்பான ஸ்பார்க்கில் இருந்த வசதிகள் இந்த புதிய காரிலும் இருக்கும். இப்போதைக்கு ஜிஎம்மின் பெரிய நம்பிக்கைக்குரிய மார்கெட்டாக திகழ்வது இந்தியாதான். இங்குதான் குறைந்த செலவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை எங்களால் மேற்கொள்ள முடிகிறது.
இந்தியாவிலும் சீனாவிலும்தான் இப்போதைக்கு நாங்கள் முழு கவனம் செலுத்தப் போகிறோம். ஜிஎம் நிறுவன மீட்சிக்கு இந்த ஆசிய நாட்டு வாடிக்கையரின் தேவை அதிகரிப்புதான் கை கொடுக்கும்" என்றார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications