தமிழர்களின் இதயங்களை கவர்வோம்-ராஜபக்சே
கொழும்பு: விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே, தமிழர்கள் அச்சமின்றி வாழ வழி செய்வோம் என்றும் அவர்களது இதயத்தை கவர்வோம் என்றும் பேசினார்.
விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் வென்றதையடுத்து துறைமுகப் பகுதியில் நடந்த விழாவில் தமிழில் பேசிய ராஜபக்சே கூறுகையில்,
இந்த போர் விடுதலை புலிகளுக்கு எதிரானது. தமிழர்களுக்கு எதிரானது அல்ல. பாசத்துக்குரிய இலங்கை ராணுவ வீரர்களே, தீவிரவாதத்துக்கு எதிரான போர் முடிந்துவிட்டது. இனி நாம் தமிழர்களின் இதயங்களை வெற்றி கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் தமிழ் மக்களை காக்க வேண்டும். அவர்கள் இங்கு பயமில்லாம் வாழ வேண்டும். இது நம்முடைய பொறுப்பு என்றார்.
சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்த விழாவில் ''போர் முடிந்துவிட்டது. விடுதலை புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர். நாடு சுதந்திரமாகிவிட்டது'' என்று எழுதப்பட்ட செய்தி சுருளை முப்படை தளபதிகளிடம் ராஜபக்சே வழங்கினர்.
விழாவில் ராணுவத்தின் பீரங்கி பட்டாலியன்கள் அணிவகுத்து சென்றன.
இதை தொடர்ந்து கடலில் இலங்கையின் கப்பற்படை கப்பல்களும் அணிவகுத்தன.
கடைசியாக இலங்கை விமான படையின் சாகச நிகழ்ச்சியுடன் விழா நிறைபெற்றது. விழாவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
உச்சக்கட்ட பாதுகாப்பு...
இந்த விழாவில் இலங்கையின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி நடந்த காலே பேஸ் கிரீன் கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டிருந்தன.
புலிகள் கொரில்லாத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் அப்பகுதியில் கட்டிடங்களின் மேல் தளத்தில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவல் இருந்தனர். விமானத்தை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இலங்கை அரசு நிலையில் வைத்திருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications