சென்னை-திருச்செந்தூர் தினசரி ரயில்: மம்தா உறுதி
சென்னை: சென்னை-திருச்செந்தூருக்கு இடையே வாரமுறை ஓடும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்றுவது குறித்து பரிசீலிப்பதாக தூத்துக்குடி எம்.பி. ஜெயதுரையிடம் ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெயதுரை வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நாடாளுமன்றத்தில் நேற்று மதியம் சுமார் 12.15 மணிக்கு பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.
பதவி பிரமாணம் பெற்று கொண்டதை அடுத்து முதல் வேலையாக தனது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூர்-சென்னை ரயிலை தினசரி விட வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் அலுவலகத்துக்கு சென்றார்.
மம்தாவை நேரில் சந்தித்து தனது மனுவை கொடுத்தார். அந்த மனுவில்,
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தற்போது வாரம் ஒரு முறை செந்தூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 19ம் தேதி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்துக்கு 5 நாட்கள் இயக்கப்படும் என அப்போதைய ரயில்வை துறை அமைச்சர் லாலு அறிவித்தார்.
ஆனால், அப்போது தேர்தல் விதிகள் நடைமுறையில் இருந்ததால் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் செந்தூர் எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக மாற்றி அறிவிக்க வேண்டும் என ஜெயதுரை மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவை வாங்கி கொண்ட மம்தா பானர்ஜி கூறுகையில், நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆக பதவியேற்று கொண்டதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பதவியேற்ற உடனே தொகுதி மக்களுக்காக உழைக்க நினைக்கும் உங்கள் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. உங்கள் கோரிக்கையை நிச்சயம் பரிசீலிப்போம் என்றார் மம்தா பானர்ஜி.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications