கருணாநிதி சாணக்கியனைவிட சிறந்தவர்-ஸ்டாலின்
சென்னை: அரசியல் சாதுரியத்தில் சாணக்கியனைவிட சிறந்தவர் கருணாநிதி என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்த நாளையொட்டி சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,
14 வயதில் பள்ளி மாணவனாக இருந்தபோது, இந்தித் திணிப்பை எதிர்த்து போராடியதன் மூலம் தனது பொதுவாழ்வை தொடங்கியவர் கருணாநிதி. இன்று பொதுவாழ்வில் அவர் 72 ஆண்டுகளைக் கடந்துள்ளார்.
1957ல் குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில் முதன்முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது முதல், இதுவரை ஒருமுறை கூட தோல்வியடையாதவர். சட்டப்பேரவைப் பணியிலும் 50 ஆண்டுகளைக் கடந்து, பொன்விழா கண்ட ஒரே இந்தியத் தலைவர்.
அவர் தமிழகத்தில் தீட்டிய பல திட்டங்கள், சாதனைகள்தான் இன்று இந்தியாவின் பல மாநில அரசுகளால் பின்பற்றப்படுகின்றன. அந்த சாதனைகளுக்குப் பரிசாக இந்தத் தேர்தலில் மக்கள் நமக்கு வெற்றியை அளித்துள்ளனர்.
இந்தியாவிலுள்ள பல கட்சிகளும் யார் ஆட்சி அமைப்பது, யார் பிரதமர் என்பதையெல்லாம் தேர்தலுக்குப் பிறகு கூறுகிறோம் என்றார்கள். ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும், மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் என உறுதிபடக் கூறிய ஒரே தலைவர் கருணாநிதிதான்.
அரசியலில் சிறந்தவர்களுக்கு சாணக்கியனை இலக்கணமாகக் கூறுவது வழக்கம். ஆனால் அதெல்லாம் பழைய கதை. இன்று அரசியல் சாதுர்யத்தில் கருணாநிதியைவிட சிறந்தவர், இந்தியாவில் யாருமே இல்லை என்றார் ஸ்டாலின்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications