இலங்கை அரசுக்கு தண்டனை-தி.க. கோரிக்கை
சென்னை: ஈழ போரில் கடைசி இரண்டு நாட்களில் போர் நெறிமுறைகளை மறந்து 20,000க்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு உலக நாடுகள் தண்டனை பெற்றுத் தர வேண்டும் திராவிட கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் செயற்குழு கூட்டம் அதன் வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஐநா சபையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது கோடான கோடி தமிழர்களுக்கு வேதனை தருவதாக உள்ளது.
போரின் முடிவில் கடைசி சில நாட்களில் இலங்கை ராணுவத்தால், யுத்த நெறிமுறைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். கொடூரமாக மக்களை கொன்றவர்களுக்கு உரிய தண்டணைப் பெற்றுத்தர உலக நாடுகள் முன் வர வேண்டும்.
முகாம்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்று குடியேற உடனடி நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை நிர்பந்திக்க உலக நாடுகள் முன் வர வேண்டும்.
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை எந்த காரணத்தை கொண்டும் முடக்கிவிடாமல் விரைவில் செயல்படுத்த வேண்டும். திராவிடர் கழகத்தின் மூட நம்பிக்கை ஒழிப்பு பிரசார பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications