ஜூலை 3ல் மத்திய பட்ஜெட்!-வருமான வரி விலக்கு உயரும்?
டெல்லி: வரும் ஜூலை 3ம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இதில் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டுக்கு முன் ஜூன் 30ம் தேதி அல்லது ஜூலை 1ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரதமர் மன்மோகன் சிங் அரசு இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்தது. இப்போது தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார்.
இதற்காக, ஜூன் மாத கடைசியில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
இப்போது பட்ஜெட் தயாரிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிரணாப் சில நாட்களாக தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் இந்த பட்ஜெட்டில், தேர்தலையொட்டி தரப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல சலுகைகளையும் பிரணாப் முகர்ஜி அறிவிப்பார் என்று தெரிகிறது.
குறிப்பாக வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு தற்போதைய ரூ.1 .5 லட்சமாக உள்ளது. இது ரூ.2 லட்சம் அல்லது ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
இந்த பட்ஜெட்டுக்கு முன்பாக, ஜூன் 30ம் தேதி அல்லது ஜூலை 1ம் தேதியில் ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications