கோவை பெண் டாக்டருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை
கோவை: கோயம்புத்தூரில் அரசு மருத்துவமனையில் ஸ்வைன் ப்ளூ நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டர் ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோயம்புத்தூர் காளப்பட்டியை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கும் அவரது ஐந்து வயது மகனுக்கும் ஸ்வைன் ப்ளூ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் சமீபத்தில் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்களுக்கு சிகிச்சை அளித்த 24 வயதான குஜராத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருக்கும் ஸ்வைன் ப்ளூவுக்கான அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை வலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பரிசோதனைக்கு பின் அவரது சோதனை முடிவும் தெரிய வந்துள்ளது. அதில் அந்த பெண் டாக்டருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் இரண்டு நாள் கூடுதல் சிகிக்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது.
இந்நிலையில் பன்றி காய்ச்சல் இருப்பதாக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஊட்டியை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 9 வயது மகன் ஆகிய மூன்று பேரின் பரிசோதனை முடிவும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் குமரன் கூறுகையில்,
கோவை மருத்துவமனையி்ல் ஸ்வைன் ப்ளூ காரணமாக தற்போது 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல் நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
ஸ்வைன் ப்ளூ நோயாளிகள் இருப்பதால் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் மற்ற நோயாளிகள் யாரும் பயப்பட தேவையில்லை. அவர்கள் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண இருமல், சளி காய்ச்சல் இருப்பவர்கள் உடனே சோதனை செய்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications