தீ: உடல் கருகி பெண் பலி-500 வாகனங்கள் சேதம்
சென்னை: சென்னை அருகே வேப்பமுத்து ரயில்வே நிலையத்துக்கு அருகே இருந்த இரு சக்கர வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் பலியானார். சுமார் 500 பைக் மற்றும் சைக்கிள்கள் நாசமடைந்தன.
சென்னையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் வேப்பம்பட்டு ரயில்வே நிலையம் இருக்கிறது. இங்கிருந்து தினமும் ஏராளமானவர்கள் வேலை நிமித்தமாக சென்னைக்கு போய் வருவதால் அப்பகுதியில் இருக்கம் இரு சக்கர வாகன நிறுத்தத்தில் கூட்டமி நிரம்பி வழியும். அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படும்.
இந்நிலையில் நேற்று காலை இரு சக்கர வாகன நிறுத்தத்துக்கு அருகில் இருந்த குப்பைக்கு யாரோ சிலர் தீ வைத்துள்ளனர். அப்போது நன்றாக காற்று வீசியதால் தீ அருகில் இருந்த குடிசைக்கும், இரு சக்கர வாகன நிறுத்ததுக்கு பரவியது.
இதையடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளின் எரிபொருள் டாங்குகள் வெடித்தன. தீ மளமளவென பரவி இரு சக்கர வாகன நிறுத்தத்தை ஆக்ரமித்தது. அந்த வாகன நிறுத்தத்தில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட சைக்கிள்கள், பைக்குகள் எரிந்து சாம்பலாகின.
இதை தொடர்ந்து தீ அருகிலிருந்த மளிகை கடைக்கும் பரவியது. அதில் கடையில் இருந்த நந்தகோபால் என்பவரின் மனைவி வித்யா (27) என்பவர் தீயில் உடல் கருகி பலியானார்.
இந்த சம்பவத்தை அடு்தது சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் அனைத்து ரயில்களும் சுமார் 1 மணி நேரம் நிறுத்தப்ப்டடது. மேலும் அப்பகுதியில் தென்னக ரயில்வே சிறிது நேரம் மின்சார இணைப்பையும் துண்டித்தது. இதனால் மின்சார ரயில்களும் இயங்கவில்லை.
தீ விபத்து 10.30 மணிக்கு மேல் நடந்ததால் வேலைக்கு செல்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், இரு சக்கர வாகன நிறுத்தத்தில் பைக், சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றவர்கள் அலுவலகம் விட்டு வரும்போது அந்த பகுதி தீக்கு இரையானதை கண்டு அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications