சிஎம் சார்.. எங்கள் கை பூ பறிக்கவா செய்யும்.. விளாத்திகுளம் எம்எல்ஏ கைதுக்கு எதிராக அப்பாவு ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசிய புகாரில், விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை கைது செய்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை. BNS 351(3) - கடுமையான குற்ற மிரட்டல், BNS 352 - அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல் , BNS 353(2) - சமூகங்களுக்கு இடையே பகைமையைத் தூண்டும் பொய்யான தகவல் பரப்புதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் அப்பாவு, சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் சட்டசபை சபாநாயகருமான அப்பாவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "பெருந்தலைவர் காமராஜர் , பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் மீதான விமர்சனத்தை எளிதில் கடந்து சென்று விடுவார்கள்..
அவர்கள் வழிவந்த தளபதி மு.க.ஸ்டாலின், தன்னைப் பார்த்து முட்டாள் முதல்வரே என்று ஒருவர் விமர்சித்த போது முட்டாள் இப்படித்தான் பேசுவான் என்று கடந்து சென்றார்..

former TN assembly specker Appavu opposes the arrest of Vilathikulam DMK MLA Markandeyan

CM Sir .. நீங்களோ மாண்பு நிறைந்த சட்டப்பேரவையில் உங்கள் அப்பாவை எங்கே காணோம் ? என்று நையாண்டி செய்கிறீர்கள்.. ஐந்து நிமிடம் பேச்சில் முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டுவிட்டேன் என்று கொக்கரிக்கிறீர்கள்... ஆதாரம் இன்றி பார்ட்டி பண்ட் என்று பேசி ஆனந்தப்படுகிறீர்கள்..

கரூர் பொதுக் கூட்டத்திலே ஓடு ஓடு ஓடு ஓடு என்று அங்க அசைவுடன் பாட்டு பாடி இனி சட்டமன்ற கதவை பூட்டுவேன் என்று ஆணவமாய் பேசுகிறீர்கள்.. நீங்கள் என்ன மொழியில் பேசினீர்களோ அதே மொழியில் பதில் தந்துள்ளார் மார்க்கண்டேயன். எங்களை சட்டமன்றத்திற்குள் பூட்டி வைத்து ஏதாவது செய்ய நினைத்தால் எங்கள் கை பூ பறிக்கவா செய்யும் ? என்று தற்காப்பு உணர்வுடன் அவர் பேசியுள்ளார்..

முட்டாள் முதல்வரே என்று பேசியவர்க்கும், தம்பி குடும்பத்தை வீடு புகுந்து தாக்கியவருக்கும், லட்சக்கணக்கான ஒரு திரண்ட மைதானத்தில் தைப்பொருள் பயன்படுத்தியவருக்கும் அமைச்சர் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கும் நீங்கள், உங்கள் கட்சியினருக்கு ஒரு நியாயம்? எதிர்கட்சியினருக்கு ஒரு நியாயமா?
உதவி கேட்டு வந்த த.வெ.க இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை எம்.எல்.ஏ-வாக உங்கள் கட்சியில் தொடர பெருந்தன்மையுடன் அனுமதித்து உள்ளீர்கள். உங்களோடு இருப்பவர்களின் குற்றங்களை பொறுத்துக்கொள்ள பழகிய உங்களுக்கு எதிர்க்கட்சியினரின் விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமல் போனது ஏன் ? தலைவர்களின் படங்களை வெறுமனே அலங்கரித்தால் மட்டும் போதாது..அவர்களது பண்பும் வரவேண்டும் சிஎம் சார்." இவ்வாறு கூறியுள்ளார்.

தவெக கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்த கரூர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதற்கு பதில் சொல்லும் விதமாக விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு கைது செய்யப்பட்டதாக திமுகவினர் பலர் விமர்சிக்கிறார்கள். அதேபோல் தவெக ஆட்சியில் கைது செய்யப்படும் 2வது திமுக எம்எல்ஏ இவர் என்றும் முன்னதாக திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார் என்றும் திமுகவினர் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+