வேலைக்கு போக சொன்னதால் சிறுமி தீக்குளித்து பலி
நெல்லை: வீட்டில் வேலைக்கு போக சொன்னதால் மனமுடைந்த சிறுமி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம், கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பந்தபுளி கிராமத்தை சேர்நதவர் முருகன். இவரது மகள் கவிதா. சிறுமி கவிதாவுக்கு படிப்பு சரியாக வராததால் அவரது பாட்டிக்கு துணையாக பாட்டியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமி கவிதாவை அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலைக்கு சேர்த்தனர். வேலை கடினமாக இருந்ததால் கவிதா வேலைக்கு செல்ல மறத்துவிட்டார். இதையடுத்து அந்த சிறுமியை சத்தம் போட்டு வேலைக்கு அனுப்பியுள்ளார்கள்.
இதனால் அவர் இரண்டு நாள் வேலைக்கு போயுள்ளார். அதன் பின்னர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் படுத்து தூங்கி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிதாவின் பாட்டி அவரை சத்தம் போட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த கவிதா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications