விமான நிலையத்தில் அதிகாரிகள் மோதல்-அழகிரி, எம்.பி.க்கள் அவதி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக ராணுவ அதிகாரிக்கும், விமான நிலைய அதிகாரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்போது அங்கு வந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் எம்.பி.க்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்கும் நோக்கத்தில் சென்னை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து விமான நிலையத்துக்கு செல்லும் பாதையில் ஆங்காங்கே தடுப்பு பலகைகள் அமைக்கபபட்டுள்ளன.
குறிப்பிட்ட இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்று காலை விமான நிலையத்துக்கு குல்கர்னி என்ற ராணுவ அதிகாரி தடுப்புகளை அகற்றிவிட்டு காரில் விமான நிலையம் அருகே வரை சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த ராணுவ அதிகாரிக்கும், விமான நிலைய போக்குவரத்து அதிகாரி வேணுகோபால், விமான நிலைய மேலாளர் போராவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. இதை தொடர்ந்து விமான நிலைய அதிகாரி தனது மேலதிகாரிக்கு புகார் கொடுத்துள்ளார்.
இந்த மோதல் நடந்து கொண்டிருந்த வேலையில் மத்திய அமைச்சர் அழகிரி, தமிழக எம்.பி ஜெயதுரை, மாணிக்க தாகூர் மற்றும் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் வந்தனர்.
அந்த ராணுவ அதிகாரி தடுப்புகளை அகற்றிவிட்டு சென்றதால் அழகிரி உள்ளிட்டோர் வெகு தொலைவில் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications