யுஎஸ் ராணுவத்தில் சீக்கியர்கள்-பென்டகன் பரிசீலனை
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் சீக்கியர்களையும் சேர்ப்பதற்காக தற்போது உள்ள கொள்கையில் திருத்தம் செய்வது குறித்து ராணுவத் தலைமையகமான பென்டகன் பரிசீலனை செய்து வருகிறது.
அமெரிக்க குடியுரிமை பெற்று வசித்து வரும் சீக்கியர்கள், தங்களையும் ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகின்றனர். ஆனால் தற்போது சீக்கியர்களை ராணுவத்தில் சேர்க்க அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கொள்கையில் இடமில்லை.
இந்த நிலையில் சீக்கியர்களையும் ராணுவத்தில் சேர்க்க வசதியாக கொள்கையில், திருத்தம் கொண்டு வர பென்டகன் யோசித்து வருகிறது.
இதுகுறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் சார்பாக, பென்டகனின் கொள்கை வகுப்புப் பிரிவு இயக்குநர் மேஜர் ஜெனரல் ஜான் ஹாக்கின்ஸ் கூறுகையில், அமெரிக்க சீக்கிய குடிமக்களையும் ராணுவத்தில் சேர்ப்பது குறித்து தற்போது உள்ள கொள்கையில் திருத்தம் கொண்டு வருவது குறித்து யோசிக்கப்பட்டு வருகிறது.
சீக்கியர்கள் அணிந்திருக்கும் தலைப்பாகைதான் (டர்பன்) அவர்களை ராணுவத்தில் சேர்க்க தடையாக உள்ள விஷயம்.
அதுகுறித்து தற்போது பரிசீலிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீக்கிய மதத்தினரின் எதிர்பார்ப்பு மற்றும் கவலைகளை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் என்றார் அவர்.
பென்டகனின் இந்த கருத்துக்கு சீக்கிய சமுதாயத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சீக்கிய கூட்டணி என்ற அமைப்பின் செயல் இயக்குநர் அமர்தீப் சிங் கூறுகையில், ராணுவம் தனது கொள்கையை பரிசீலிக்கும் என்று நம்புகிறோம். இதன் மூலம் சீக்கியர்களுக்கும் ராணுவத்தில் இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் எந்த ராணுவத்திலும் இணைந்து பணியாற்றும் தகுதி படைத்தவர்கள் சீக்கியர்கள் என்ற பெருமையும் இதன் மூலம் கிடைக்கும் என்றார்.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications